இது பெண்களால் கிடைத்த வெற்றி! | முகங்கள்

இது பெண்களால் கிடைத்த வெற்றி! | முகங்கள்
Updated on
2 min read

வீடு - அலுவலகம் என இரண்டு இடங்களிலும் அல்லல் படுவதைவிடச் சுயதொழில் தொடங்கலாம் எனப் பல பெண்கள் நினைத்தாலும் அனைவருக்கும் அப்படியான சூழலும் பொருளாதாரப் பின்புலமும் அமைந்துவிடுவதில்லை. மிகச் சிலரே தொழில்முனைவோராகத் தடம்பதிக்க முடிகிறது. இப்படியொரு பின்னணியில் ஜவுளித் துறை சார்ந்த மூன்று நிறுவனங்களை சென்னையில் நடத்திவருகிறார் மீனு குப்தா. பொதுவாகத் தொழிற்சாலைகள் என்றாலே அவை ஆண்கள் மட்டுமே நடமாடும் இடம் என்கிற கற்பிதத்தையும் இவர் மாற்றி அமைத்திருக்கிறார். இவரது தொழிற்சாலை முழுவதும் பெண்களே நிறைந்திருக்கிறார்கள்!

மீனு குப்தா டெல்லியில் பிறந்து, வளர்ந்தவர். திருமணத்துக்குப் பிறகு பாண்டிச்சேரியில் குடியேறினார். உயிரி அறிவியல், உளவியல், மக்கள் தொடர்பியல் என ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத துறைகளில் பட்டம் பெற்றவர் மீனு குப்தா. படித்து முடித்ததும் ஆங்கில வார இதழ் ஒன்றை ஆரம்பித்து நடத்திவந்தவர், அதன் பிறகு 25 ஆண்டுகள் பயணம் தொடர்பான வர்த்தகத்தில் ஈடுபட்டார். தற்போது, ‘கிரீன் இம்ப்ரஷன்ஸ்’ (Green Impressions), ‘பேக் வேர்ல்டு’ (Bagworld), ‘பியாண்டு பிலீஃப்’ (Beyond Beleaf) ஆகிய நிறுவனங்களை நடத்திவருகிறார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in