

கேரளத்தைச் சேர்ந்த 70 வயது இந்திராவுக்குப் பயணங்கள் செல்ல வேண்டும் என்பது சிறு வயது கனவு. அது 60ஆவது வயதில்தான் அவருக்கு நனவானது. 2015இல் தனியாகப் பயணம் மேற்கொள்ளத் தொடங்கியவர் தற்போது 35 நாடுகளுக்கும் மேல் பயணித்துவிட்டார். இன்னும் செல்ல வேண்டிய நாடுகளின் பட்டியலைக் கையில் வைத்திருக்கிறார்.
சிறு வயதில் வீட்டின் நிதி நிலைமை காரணமாகப் பயணங்கள் மேற்கொள்ள முடியவில்லை. திருமணத்துக்குப் பிறகு குடும்பம், குழந்தைகள் என்றான நிலையில் பரண் மேல் போட்டுவிட்ட பயணக் கனவை 60 வயதில் தூசிதட்டி கீழே இறக்கினார் இந்திரா. 2010இல் அவருடைய கணவர் இறந்துவிட, தன் வயதையொத்த நண்பர்களோடு அறையைப் பகிர்ந்துகொள்ள நேர்ந்தபோதுதான் ‘தனிப் பயணம்’ என்பது குறித்து இந்திரா தெரிந்துகொண்டார்.