

என் அப்பா சிறுவனாக இருந்தபோது அவருடைய அப்பா (என் தாத்தா) தையல் கடை நடத்திக்கொண்டிருந்தாராம். அப்போதே அவர் உடல் நலமில்லாமல் இறந்துவிட்டார். பிறகு என் அப்பாவுக்குத் திருமணம் முடிந்து, நான் பிறந்தேன். பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு தையல் கலை பயின்று வீட்டிலேயே தையல் இயந்திரம் வாங்கிவைத்துத் தைக்கத் தொடங்கினேன். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு ரவிக்கை, குழந்தைகளுக்குத் தேவையான உடைகள் ஆகியவற்றைத் தைத்துக் கொடுத்தேன்.
அந்த அனுபவத்தில் தற்போது பெண் களுக்கான சுடிதார், மிடி போன்றவற்றைத் தைத்துக் கொடுத்து எங்கள் பகுதியின் அறியப்படும் ‘பெண் டெய்லர்’ என்கிற பெயரையும் பெற்றுவிட்டேன். ‘தாத்தாவின் வாரிசாகப் பேத்தியும் தையல் கலை கற்றுக்கொண்டுவிட்டாள்’ என்று யாராவது என் காதுபடப் பாராட்டும்போது பெருமையாக இருக்கிறது.