

உலகம் முழுவதும் அதிகாரத்துக்காக நடத்தப்படும் போர்களால் பாதிக்கப் படுகிறவர்களில் பெண்களும் குழந்தைகளும் 92%ஆக இருக்கின்றனர் என ஐ.நா.வின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் மோதல்களின்போது நிகழும் பாலியல் வன்முறை 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டு 25% அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான வன்முறை 35% அதிகரித்துள்ளது. இதுபோன்ற வன்முறைகளில் அரசு - அரசுசாராத குழுக்கள் ஈடுபடுவதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
மோதல்கள் நிகழும் 21 பகுதிகளில் மத்திய ஆப்ரிக்கா, காங்கோ குடியரசு, ஹைதி, சோமாலியா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கையாள்வதற்காக ஐ.நா.வால் ஓர் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வெறும் 24 மணி நேரத்தில் உலக ஆயுத அமைப்புகள் செலவிட்டுவிடுவதாக மோதல்களால் நிகழும் பாலியல் வன்முறை தொடர்பான அமைப்பின் பொதுச் செயலாளர் பிரமிளா தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம், அமைதியை நிலைநாட்டுதல், பாதிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்வுக்கு உத்தரவாதமளித்தல் ஆகியவையே தற்போதைய் தேவை என அவர் வலியுறுத்துகிறார்.