

நாளிதழ்களின் இணைப்பிதழ்களைப் புரட்டிப் பார்க்கும் பழக்கம், வாசிப்பாக மாறியது எப்போது என்று சரியாக நினைவில்லை.எண்களை இணைத்து ஓவியம் உருவாக்கும் பகுதிதான் புத்தகங்களில் நான் போட்ட முதல் கோடு. அந்தக் கோடுதான் இப்போது எந்தப் புத்தகத்தை எடுத்தாலும் கோடுபோட்டுப் படிக்கும் பழக்கத்தின் அடிப்படை.
இந்தப் பழக்கம் கல்லூரிப் பருவத்தில் பாடப் புத்தகங்களைப் படித்தபோது பெரும் உதவியாக இருந்தது. போட்டித் தேர்வுகளுக்குத் தயாரானபோதும் இவ்வழக்கம் கைகொடுத்தது. பிறகு குறுக்கெழுத்து, வார இதழ்களில் வெளியாகும் அறிவுசார் போட்டிகளில் கலந்துகொள்ள சகோதரருடன் ஏற்பட்ட ஆரோக்கியமான போட்டி, எங்கள் தந்தையும் எங்களுக்காகப் போட்டிகளில் இருந்து கலந்துகொண்டார் என்பதாக எங்கள் உறவு புத்தகத்துடன் மேலும் வலுப்பெற்றது.