

எழுத்தாளர் ஹெப்சிபா பிறந்த நூற்றாண்டு இது. ஹெப்சிபா வின் நூல்களில் ஒன்றிரண்டைத் தவிர, மற்றவை இப்போது பதிப்பில் இல்லை. ஹெப்சிபாவும் மக்கள் நினைவிலிருந்து மறைந்துவிட்டார். ஹெப்சிபா குடும்பத்தைத் தேடிப் பிடித்து, அவரின் இளைய மகன் பேராசிரியர் தம்பி தங்கக்குமரனிடம் பேசியபோது, ஹெப்சிபாவின் பிறந்தநாளை ஒட்டி சிறு கூடுகை இருப்பதாகச் சொன்னார்.
அதில் கலந்துகொள்ள ‘பனைவிளை’ என்கிற புலிப்புனத்துக்குச் சென்றேன். பனைவிளை என்பது ஹெப்சிபாவின் கற்பனையில் உதித்த ஊர். புலிப்புனத்தின் வார்ப்பு. ஆர்.கே.லக் ஷ்மணின் மால்குடிபோல ஹெப்சிபாவின் பனைவிளை! புலிப்புனத்தில் ரப்பர் மரங்கள் சூழ்ந்த நடுத்தர வர்க்க வீடு, ஹெப்சிபாவின் மகனுடைய வீடு. அங்கேதான் தன் இறுதிக் காலத்தை அவர் கழித்திருக்கிறார்.