இசையே அடையாளம்

இசையே அடையாளம்
Updated on
1 min read

மலேசியப் பாடகியான கஷ்மிரன், பல் இசை வித்தகி. மலேசியாவின் பிரத்யேக இசை வடிவமான ஹிராமா மெலாயு, வேர்ல்டு ஆஃப் மியூசிக் சவுண்ட், ஏசியன் பேலட், இந்தோனேசியாவின் பாரம்பரிய இசையான டேன்ங்டட், சுஃபி கவ்வாலி, இந்தியன் மெலடி போன்ற இசை வகைமைகளில் பாடும் திறமை பெற்றவர். தமிழ், பாஷா மலேசியா, பாஷா இந்தோனேசியா, ஜாப்பனீஸ், ஃபிரெஞ்சு, மண்டாரின், மலையாளம், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் பாடும் திறமையையும் வளர்த்துக் கொண்டிருக்கிறார்.

கற்பனை வளத்துடன் புதுமையான முறையில் பாடல்களை எழுதிப் பாடும் திறமை பெற்ற கலைஞர்களைத் தேர்வு செய்யும் போட்டியில் மலாய் மொழியில் ‘ஜிவா மலேசியா’ என்னும் பாடலையும் தமிழில் ‘ஹிஜ்ரா பிறந்தாள்’ பாடலின் மூலம் திருநர் சமூகத்தினரின் விடியலையும் பாடி, மலேசியாவின் சிறந்த பாடகருக்கான பரிசை வென்றிருக்கிறார் கஷ்மிரன்.

சென்னைக்கு வந்திருந்த திருநங்கை கஷ்மிரனிடம் பேசியபோது, “சிட்டி நுராஃலிஸா அலிஜா என்பவர்தான் மலேசியாவின் இசை இளவரசி. ஆசியாவிலேயே இந்த முறையில் முன்னுதாரணமாக அறியப்படுபவர். இவருடன் இணைந்து ஒரு பாடல் பாடியிருக்கிறேன். புகழ்பெற்ற மலேசியப் பாடகரும் இசையமைப்பாளருமான அமீர் ஜிஹாரியின் இசையில்தான் என்னுடைய முதல் மலேசிய மொழி அறிமுகப் பாடலான ‘ஜிவா மலேசியா’ வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது” என்கிறார்.

லயர்பேர்ட் ஆஃப் ஏசியா, இந்தியன் பாப் ஐகான், ஆசியாவின் சிறந்த 100 பிரபலங்களில் ஒருவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல ஸில் நடந்த வேர்ல்டு சாம்பியன்ஸ் ஆஃப் பெர்பார்மிங் ஆர்ட்ஸ் போட்டியில் இருமுறை வெள்ளிப் பதக்கம் வென்றி ருக்கிறார். இந்தப் போட்டிக்காக கஷ்மிரனுக்கு இசைப் பயிற்சி அளித்தவர், இருமுறை கிராமி விருதை வென்ற ஜெஃப்ரி வெப்பர். ‘ஜிவா மலேசியா’ பாடலின் மூலம் உலக அளவிலான பெருமையைப் பெற்றிருக்கும் மலேசியா வின் முதல் திருநர் என்னும் பெருமையும் கஷ்மிரனுக்கு உண்டு!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in