பெண் இன்று
பரிசு மழையில் நனைந்த சென்னை வாசகியர்!
‘இந்து தமிழ் திசை’யின் ‘பெண் இன்று’ சார்பில் சென்னையில் மார்ச் 16 ஞாயிறு அன்று நடைபெற்ற மகளிர் திருவிழாவை வாசகியர் கொண்டாடித் தீர்த்தனர்.
சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மகளிர் திருவிழாவில் எழுத்தாளரும் சமூகச் செயல்பாட்டாளருமான ஓவியா, சமூகத்தில் பெண்களின் நிலை குறித்துப் பேசினார். மகப்பேறு மருத்துவரும் ‘மித்ராஸ்’ ஃபவுண்டேஷன் நிறுவனருமான டாக்டர் அமுதா ஹரி, ஆரோக்கியம் சார்ந்து பெண்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்துப் பேசினார். எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக நிர்வாகிகள் மேலாண் மைக் குழுத் தலைவர் டாக்டர் வி.சசிரேகா, வாழ்த்துரை வழங்கினார். பேச்சரங்கத்தைத் தொடர்ந்து கடலூர் செம்மண்டலத்தைச் சேர்ந்த மோகன சங்கரியின் நடனமும் சென்னை மேல்அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா இணைப்புப் பள்ளி மாணவியரின் ‘நீ ஆண், நீ பெண்’ நாடகமும் நடைபெற்றன.
