

வரலாற்றில் மறைக்கப்பட்ட பெயர்கள் பெரும்பாலும் பெண்களின் பெயர்களாகவே இருக்கின்றன என எழுத்தாளர் வர்ஜினியா வுல்ஃப் குறிப்பிட்டு இருப்பார். இன்றும்கூட அறிவுசார் அடையாளங்களுக்காகவும் சம உரிமைகளுக்காகவும் பெண்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது.
அந்த வகையில் சமூகத்துடனான அடையாளப் போராட்டத்தில் மட்டுமல்லாமல், மனம்சார்ந்த போராட்டத்திலும் வெற்றிபெற்று 21ஆம் நூற்றாண்டின் தவிர்க்க முடியாத கலைஞராகக் கொண்டாடப்படுகிறார் 95 வயதான யாயோய் குசாமா.