

பொதுவாகவே பெண்களுக்குள் பெரிதான ஒற்றுமை கிடையாது என்று ஒரு நம்பிக்கை உண்டு. ‘பிக் பாஸ்’ என்னும் நிகழ்ச்சியில் சமீபத்தில் பவித்ரா என்பவர் இரண்டு லட்சம் ரூபாய் கொண்ட பெட்டியை எடுப்பதற்காக ஓடுகிறார். அப்போது அவருக்கு ஜாக்குலின் மிகவும் உதவியாக இருக்கிறார். அவர்கள் இருவரும் உணர்வுபூர்வமாக நெகிழ்வுடன் பகிர்ந்துகொள்ளும் வார்த்தைகளும் மௌனங்களும் மிக அழகாக இருந்தன.
அந்த நிகழ்ச்சி நான் பெரிதும் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சியல்ல. பொதுவாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் மனிதர்களுக்குள் இருக்கக்கூடிய மன வேற்றுமைகளை டிஆர்பி ரேட்டிங்கிற்காக மிக அதிகமான அளவில் ஊதிப் பெருக்கி மார்கெட்டிங் செய்வது வழக்கம். அங்கும் இங்குமாகச் சில நேரம் சமூக ஊடகங்களில் வந்துசேரக்கூடிய காட்சிகளும் என் கணிப்பை உறுதிப்படுத்துவதாகத்தான் இருக்கும், பவித்ரா - ஜாக்குலின் காட்சியைத் தவிர.