நீதிக்கான காத்திருப்புக்கு எப்போது முடிவு? | பார்வை

நீதிக்கான காத்திருப்புக்கு எப்போது முடிவு? | பார்வை
Updated on
2 min read

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் முதன்மைக் குற்றவாளியைக் காப்பாற்றுவதற்காக அரசுப் பொறுப்பில் இருக்கிற அதிகாரியும் அரசியல் செல்வாக்கு உடைய ஒருவரும் இணைந்து செயல்பட்டிருப்பது எளியவர்களுக்கு நீதி கிடைப்பதில் உள்ள தடைகளைப் பட்டவர்த்தனமாக்கியுள்ளது.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த பத்து வயதுச் சிறுமி 2023 ஆகஸ்ட்டில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இந்த வழக்கில் 14 வயதுச் சிறுவனைக் கைது செய்தது காவல்துறை. ஆனால், 30 வயது சதீஷ் என்பவர்தான் முதன்மைக் குற்றவாளி எனவும் இந்த வழக்குத் தொடர்பாக அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜி தங்களை அடித்துத் துன்புறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் காணொளி வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து இந்த வழக்கைத் தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுப் பின்னர் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டதைத் தொடர்ந்து ஏழு பேர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவின் வசம் ஒப்படைக்கப்பட்டது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in