

அண்ணா பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு பெண்ணுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு எதிராகப் பலர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். ஆனால், இதுபோல் கல்வி நிறுவனங்களுக்குள் நிகழும் கொடுமைகளையும் தற்கொலைகளையும் தனிப்பட்ட காரணங்கள் சொல்லப்பட்டு மூடப்பட்ட வழக்குகளாக மட்டுமே நாம் அறிவோம்.
ஏழு ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட ஒரு கிராமத்துப் பெண், ஆங்கிலம் தெரியவில்லை என்பதால் இறந்துவிட்டாள் என்று சொல்லி அந்தத் தற்கொலை வழக்கைக் காவல்துறையினர் மூடிவிட்டனர். அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு அங்கு படித்த மாணவன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறான். உடனே தற்கொலை செய்துகொண்ட பெண்ணுக்கும் அந்த மாணவனுக்கும் காதல், அது தோல்வியில் முடிந்ததால் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று ஒரு கட்டுக்கதையைக் கட்டினார்கள். அத்தகைய கட்டுக்கதைகளால் அந்த வழக்கை ‘வெற்றிகரமாக’ முடித்தும் வைத்தார்கள்.