சேதி தெரியுமா?

சேதி தெரியுமா?
Updated on
1 min read

அக்.5: ஹரியாணாவில் 90 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 65% வாக்குகள் பதிவாயின.

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிக்கான மதிப்பீட்டுச் செலவில் 65% நிதியை மத்திய அரசு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

லக்னோவில் நடைபெற்ற இரானி கோப்பைப் போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை வீழ்த்தி 27 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை அணி கோப்பையை வென்றது. இது மும்பை வெல்லும் 15ஆவது கோப்பை.

அக்.6: இந்திய விமானப் படை தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் ரஃபேல், மிராஜ் உள்பட 72 விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன. சுமார் 15 லட்சம் பேர் கூடிய இந்த நிகழ்ச்சி லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் வெயில், நெரிசலால் 240 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். 5 பேர் உயிரிழந்தனர்.

அக்.7: இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகர் (31) ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2016 ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக்கில் வால்ட் பிரிவில் நான்காமிடம் பிடித்து நூலிழையில் வெண்கலம் வெல்லும் வாய்ப்பை இழந்தவர் இவர்.

உயிரியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் விக்டர் ஆம்ப்ரோஸ், கேரி ரஃப்குன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

அக்.8: ஹரியாணா, ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டதில் ஹரியாணாவில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 48 தொகுதிகளில் பாஜக வென்று மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்தது. ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாடு, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி 49 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது.

இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்ஃபீல்டு, கனடாவின் ஜெஃப்ரி ஹிண்டன் ஆகியோருக்குக் கூட்டாக அறிவிக்கப்பட்டது.

டெல்லியில் நடைபெற்ற 70ஆவது தேசியத் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் திரைப்படக் கலைஞர்களுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகள் வழங்கினார். தாதா சாகேப் பால்கே விருது நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு வழங்கப்பட்டது.

அக்.9: இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா (86) உடல்நலக் குறைவால் மும்பையில் காலமானார்.

வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் டேவிட் பாகெர், ஜான் ஜம்பர், பிரிடோன் டெமிஸ் ஹஸாபிஸ் ஆகியோருக்குக் கூட்டாக அறிவிக்கப்பட்டது.

அக்.10: ‘முரசொலி’ நாளிதழின் நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம் (82) உடல் நலக் குறைவால் காலமானார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in