Published : 05 May 2024 08:02 AM
Last Updated : 05 May 2024 08:02 AM

ப்ரீமியம்
பெண்கள் எங்கே? :

தொழிலாளர் என்று சொன்னதுமே உடலுழைப்புத் தொழிலில் ஈடுபடும் ஆண்கள்தான் பலரது மனக்கண்ணிலும் தோன்றுவார்கள். வீட்டிலும் வெளியிலும் நாள் முழுக்கப் பாடுபடும் பெண்களை ஒருபோதும் ‘தொழிலாளர்’ என்கிற வரையறைக்குள் வைப்பதற்குப் பலருக்கும் தயக்கம் இருக்கிறது. உழைப்பின் உன்னதத்தையும் தொழிலாளர்களின் பெருமையையும் உணர்த்தும் விதமாக மே 1 அன்று கொண்டாடப்படும் தொழிலாளர் நாளில்கூடப் பெண்களின் உழைப்பைப் பலரும் கணக்கில் கொள்வதில்லை.

உழைப்பாளர்களின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் 1959இல் நிறுவப்பட்ட உழைப்பாளர் சிலையில் ஒருவர்கூடப் பெண்ணில்லை. இது குறித்து ‘2018இல் பெண் இன்று’வில் வெளியான கட்டுரையில் கவனப்படுத்தியிருந்தோம். கடந்த சில ஆண்டுகளாகச் சமூக ஊடகங்களிலும் இது குறித்த விவாதங்கள் எழுந்தன. சிலை அமைக்கப்பட்டு 60 ஆண்டுகள் கடந்த பிறகும் ஆண்கள் மட்டுமே அந்தச் சிலையில் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்று சமூகத்தில் ஆணுக்கு நிகராகவோ சில நேரம் ஆணைவிட அதிகமாகவோ பெண்கள் உழைத்தாலும் உழைப்பாளர் சிலையில் பெண்ணுக்கு இடமளிக்கக்கூட நம் சமூகத்துக்கு மனம் இருப்பதில்லை. இவையெல்லாம் பெண்களின் பிரச்சினையாக மட்டுமே சுருக்கப்பட்டுவிடுகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x