குளிர்காலத்தில் முகவாதம் ஏன் ஏற்படுகிறது?

குளிர்காலத்தில் முகவாதம் ஏன் ஏற்படுகிறது?
Updated on
2 min read

மனித முகம் உணர்வுகளின் கண்ணாடி. சிரிப்பு, துக்கம், ஆச்சரியம், கோபம் என அனைத்தும் முகத்தின் மூலம் வெளிப்படு கின்றன. அந்த முகத்தின் இயக்கம் திடீரெனப் பாதிக்கப்பட்டால்? அதுதான் ‘முகவாதம்’.

மருத்துவ மொழியில் ‘பெல்ஸ் பால்ஸி (Bell’s Palsy). ஒரு பக்கம் முகத் தசைகள் திடீரெனச் செயலிழந்து வாய்கோணுதல், கண் மூட முடியாமை, சிரிக்க முடியாமை போன்ற அறிகுறிகளுடன் தோன்றும் நிலை.

முகத்தின் இயக்கத்தையும் உணர்வையும் கட்டுப்படுத்தும் ஏழாவது மூளை நரம்பான Facial Nerve (Facial Cranial Nerve – VII) பாதிக்கப் படுவதால் முகவாதம் ஏற்படுகிறது. இந்த நரம்பு திடீரென வீக்கமடைந்து அல்லது அழுத்தம் ஏற்பட்டுச் செயலிழக்கும்போது, முகத்தின் ஒரு பக்கம் முழுவதுமாக அல்லது பகுதியளவில் இயங்காமல் போகிறது.

ஆனால், சரியான நேரத்தில் கண்டறிந்து, முறையான மருத்துவமும் உடற்பயிற்சி சிகிச்சையும் பெற்றால் பெரும்பாலானவர்கள் முழுமையாக குணமடைய முடியும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in