தூக்கக் கோளாறுகள் ஏன் ஏற்படுகின்றன?

தூக்கக் கோளாறுகள் ஏன் ஏற்படுகின்றன?
Updated on
2 min read

ஒட்டுமொத்த நல்வாழ்வுக்குப் போதுமான தூக்கம் அவசியம். இருப்பினும் பலரும் தூக்கக் கோளாறுகளால் அவதிப்படுகின்றனர். இவை அன்றாட வாழ்க்கையைக் கணிசமாகப் பாதித்துச் சோர்வு, செயல்திறன் குறைதல், சில நேரத்தில் கடுமையான உடல்நலப் பாதிப்புகளுக்கும் வழிவகுக்கும்.

பகல் நேரத் தூக்கக் கலக்கம், வாகனம் ஓட்டும்போது அல்லது இயந்திரங்களைக் கையாளும்போது ஏற்படும் விபத்துகள் போன்ற பாதுகாப்பு அபாயங்களை இது ஏற்படுத்தக்கூடும்.

இந்தியாவில் சுமார் 59% முதல் 60% மக்கள் நாள்தோறும் ஆறு மணி நேரத்துக்கும் குறைவாகவே தூங்குகின்றனர். பொதுவான தூக்கக் கோளாறுகளில் இன்சோம்னியா (தூக்கமின்மை) 25.7% பேரையும் ஆப்னியா (மூச்சுத்திணறல்) 37.4% பேரையும் பாதிக்கிறது.

தூக்கக் கோளாறுகள்

தூக்கக் கோளாறுகள் இயல்பான தூக்கத்தைச் சீர்குலைக்கக்கூடியவை. இந்தக் கோளாறுகள், தூங்குவதில் அல்லது தூக்கத்தைத் தொடர்வதில் உள்ள சிரமங்கள், பகலில் அதீதத் தூக்க உணர்வு அல்லது தூக்கத்தின்போது ஏற்படும் இயல்புக்கு மாறான நடத்தைகளாக வெளிப்படலாம்.

இது ஒரு நபரின் உடல், மனநலனைப் பெரிதும் பாதித்து, அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கக்கூடும். ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு வகையான தூக்கக் கோளாறுகள் இருக்கலாம்.

தூக்கமின்மை: தொடர்ச்சியாகத் தூங்கக் கஷ்டப் படுவது அல்லது இடை யில் கண் விழித்தால் தூக்கத்தைத் திரும்பப் பெற முடியாமல் இருப்பது தூக்கமின்மை.

தூக்கத்தில் மூச்சுத்திணறல்: இந்தத் தூக்க நிலையில் ஒருவர் தூங்கும்போது சுவாசம் அடிக்கடி நின்று நின்று தொடரும். இது அடிக்கடி சத்தமான குறட்டை யையும் பகலில் அதிக தூக்கத் தையும் ஏற்படுத்துகிறது.

ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம் (ஆர்.எல்.எஸ்.): கால்களை நகர்த்த தவிர்க்க முடியாத உந்துதல், அடிக்கடி மன உளைச்சலை ஏற்படுத்தும் உணர்வுகளுடன் சேர்ந்து, தூங்குவதைக் கடினமாக்குகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in