புற்றை வளர்க்கும் இறைச்சி எது? | ருசிக்கும் முன் யோசி 8

புற்றை வளர்க்கும் இறைச்சி எது? | ருசிக்கும் முன் யோசி 8
Updated on: 
2 min read

அதி தீவிர வெப்பத்தில் உருவாக்கப்படும் சக்கை உணவு (தீவிரப் பதப்படுத்தப்பட்ட உணவு - UPF) எல்லாம் புற்றுநோயை உருவாக்கும் என ஆய்வுபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதா என்று கேட்டால், 'இதுவரை இல்லை' என்பதுதான் முதல் பதில். அப்புறம் ஏன் இவ்வளவு எச்சரிக்கை என சண்டைகட்டி வர வேண்டாம். நிதானமாக, அடுத்தடுத்த வாக்கியங்களைக் கவனமாகப் படியுங்கள்.

இந்தத் தீவிரப் பதப்படுத்தப்பட்ட உணவு, உடல் எடையைப் பெரிதும் அதிகரிக்கிறது. அதிக எடை கொண்டவர்களுக்கு 13 வகைப் புற்றுநோய்கள் வருவதற்கான சாத்தியம் உண்டு என உலகப் புற்றுநோய் ஆய்வு அமைப்பு (WCRF) தெளிவாகச் சொல்லியிருக்கிறது.

கூடவே, தீவிரப் பதப்படுத்தப்பட்ட உணவில் பயன்படுத்தப்படும் பல பொருள் களில் உற்பத்தி நிலையில் உருவாகும் அக்ரிலைமடு, ஃபியூரான் நைட்ரேட்டுகள் போன்ற பல வேதிப்பொருள்கள் புற்றுநோயை உருவாக்கக்கூடும் என்பதையும் உறுதிபடக் கூறுகிறது.

சிவப்பு இறைச்சி

செரிமான மண்டலத்தில் உருவாகும் புற்றுநோய்கள், குறிப்பாக மலக்குடல் புற்றுநோய்க்கும் தீவிரப் பதப்படுத்தப்பட்ட உணவுக்கும் உள்ள தொடர்பை ‘meta analysis systemic review’ (இது தொடர்பாக உலகெங்கும் நடந்த பல ஆய்வுகளின் முடிவுகளை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து ஆராய்வது) செய்து, ‘யப்பா! எச்சரிக்கையா இருங்கப்பா’ என்கிறது ‘Frontiers in nutrition’இல் 2026 ஜூலையில் வெளியான ஆய்வுக் கட்டுரை (10.3389/fnut.2026.1901660).

அந்தக் கட்டுரை அதிவெப்பத்தில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியைப் பற்றிப் பெரிதும் எச்சரிக்கிறது. பொதுவாக மீன், கோழியின் இறைச்சியில் சிக்கல்கள் எழுவதில்லை. ஆடு, மாடு, பன்றி இறைச்சியை ‘red meat’ என்கிறது உணவு அறிவியல். அவற்றின் தசைப்பகுதியில் நிறைந்துள்ள மையோகுளோபினே இந்தச் சிவப்பு நிறத்துக்குக் காரணம்.

Loading content, please wait...

X