திரைப்படக் காட்சி ஒன்றில் வடிவேலு ஒரு பெண்ணிடம் திருடிவிட்டுத் தப்பிக்க ஒரு குதிரை மீது ஏறிச் செல்வார். அந்தக் குதிரை கடற்கரையில் ஒரு சுற்று வந்துவிட்டு, அதன் உரிமையாளர் ‘என்னத்த’ கண்ணையாவின் அருகில் அதாவது அது ஓடத் தொடங்கிய இடத்துக்கே வந்துவிடும். நிறைய தூண்டுதல்கள் இல்லாதபோது நம் கவனமும் அப்படித்தான் தொடங்கிய இடத்துக்கே எப்படியாவது வந்துவிடும்.
அதுவே ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் வந்தியத்தேவன் செல்வது போன்ற குதிரையில் ஏறி இருந்தால், படுவேகமாக எங்கேயோ ஓடியிருக்கும். திறன்பேசிகளும் அக்குதிரைகள் போன்றவைதான். நமது கவனத்தைத் திசைதிருப்பக் கூடியவை.