

எனக்கு வயது 49. நீரிழிவு, ரத்த அழுத்தப் பிரச்சினைகள் இல்லை. மூளையில் இரண்டு பக்கமும் (ischemia changes) மிகமிகச் சிறிய அடைப்பு இருப்பதாக 2022இலிருந்து Ecosprin AE 75/20 எடுத்து வருகிறேன். தொடர்ந்து இந்த மருந்தை எடுக்க வேண்டுமா? - து. வெங்கடேஷ், திருப்பூர் இதற்குப் பதிலளிக்கிறார் மருத்துவப் பேராசிரியர் டாக்டர் சு. முத்து செல்லக் குமார்.
பெருமூளை சிறிய ரத்த நாளங்களின் இஸ்கிமிக் நோய் (Cerebral Small Vessel Ischemic disease-CSVD) என்பது தங்களுக்கு ஏற்பட்டுள்ள ஒரு ரத்த நாளப் பாதிப்பு. இந்நோய் இந்தியாவில் இன்னும் பரவலாக அறியப்படவில்லை.