தலசீமியாவை எதிர்கொள்ளும் வழிகள்

மே 8: உலக தலசீமியா நாள்
தலசீமியாவை எதிர்கொள்ளும் வழிகள்
Updated on
2 min read

தலசீமியா என்பது ஒரு வகை ரத்தக் கோளாறு. இது பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு மரபணுக்கள் மூலம் கடத்தப்படுகிறது. தலசீமியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்பு மஜ்ஜையில் உற்பத்தியாகும் ஹீமோகுளோபின் அளவு வழக்கத்தைவிடக் குறைவாகவோ ஆரோக்கியமற்றதாகவோ இருக்கும்.

இதனால் உடலுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டுசெல்லும் ரத்தச் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறையும். இது நாள்பட்ட ரத்தசோகைக்கு வழிவகுக்கும். தலசீமியாவால் பாதிக்கப்பட்ட வர்களில் அதிகமானோர் இந்தியாவில் தான் இருக்கிறார்கள் என்பதால், ‘தலசீமியாவின் தலைநகரம்’ என்று இந்தியா குறிப்பிடப் படுகிறது.

இந்தியாவில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தலசீமியாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஆண்டு தோறும் 10,000 – 15,000 குழந்தைகள் தலசீமியா பாதிப் போடு பிறக்கிறார்கள்.

தலசீமியா குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மே 8 அன்று ‘உலக தலசீமியா நாள்’ அனுசரிக்கப்படு கிறது. தலசீமியாவால் பாதிக்கப்பட்ட வர்களைக் கண்டறிவதோடு மருத்துவ சிகிச்சைக்கு வாய்ப்பு கிடைக்காதவர் களுக்கு ஆதரவாக இருப்போம் என்பது இந்த ஆண்டுக்கான கருப் பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிகுறிகள்

தலசீமியாவில் பல்வேறு வகைகள் உள்ளன. வகையையும் தீவிரத்தையும் பொறுத்தே அறிகுறிகள் அமையும். தீவிர தலசீமியாவின் அறிகுறிகளில் சில:

* சோர்வு

* பலவீனம்

* தோல் நிறத்தில் மாற்றம்

* கண்கள் மஞ்சள் நிறமாக மாறுதல்

* முக எலும்புகளில் மாற்றங்கள் அல்லது பிரச்சினைகள்

* மெதுவான வளர்ச்சி

* வயிற்றுப் பகுதியில் வீக்கம்

* அடர் சிறுநீர்

* பசியின்மை

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in