

‘பல் போனால் சொல் போச்சு' என்பது பழமொழி. உடலின் முக்கிய அங்கமான பற்களைப் பராமரிப்பதிலும் பாதுகாப்பதிலும் பலரும் அலட்சியம் காட்டுவது உண்டு. எந்தெந்த செயல்கள் பற்களைப் பாதிக்கும் என்று பல் மருத்துவர்கள் பட்டியலிடுகிறார்கள் எனப் பார்ப்போம்.
சிலர் காலையில் 5-10 நிமிடங்கள்வரை பற்களை நன்கு அழுத்தித் தேய்ப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். நன்கு அழுத்தித் தேய்த்தால்தான் பற்கள் சுத்த மாகும் என்று எண்ணுவார்கள்.
ஆனால், உண்மையில் அவ்வாறு அழுத்தித் தேய்ப்பது பற்களுக்கு ஆபத்தில் முடியும். காலப் போக்கில் ஈறுகள் தேய்ந்து பற்களின் வேர் கள் வெளிப்படத் தொடங்கும். பல் கூச்சம் (Sensitivity) ஏற்படும்.