மீண்டும் உடற்பயிற்சியைத் தொடங்கப் போகிறீர்களா?

மீண்டும் உடற்பயிற்சியைத் தொடங்கப் போகிறீர்களா?
Updated on
2 min read

நீண்ட இடைவெளிக்குப் பிறகு உடற்பயிற்சியை மீண்டும் தொடங்கும்போது, பலர் உற்சாக மாகத் தொடங்குவார்கள். ஆனால், சில தவறுகளால் உடலில் காயங்கள் ஏற்படும் அபாயம் அதிகமாகும். மிகவும் பொதுவான தவறு என்னவென்றால், மீண்டும் தொடங்கும்போதே ஒரே நேரத்தில் அதிகமாக உடற்பயிற்சி செய்வது.

உடல் அதற்குத் தயாராக இருக்காது. இதனால் தசைப்பிடிப்பு, தசைநார் கிழிதல், மூட்டுப் பகுதியில் கடுமையான வலி, வீக்கம், நிலையற்றதன்மை போன்ற பிரச்சினைகள் வரும். சிலர் தங்களின் முந்தைய உடற்தகுதி நிலைக்கு உடனே திரும்ப முயற்சிப்பார்கள்.

ஆனால், இடைவெளிக்குப் பிறகு தசை வலிமை குறைதல், தசைநார்கள் நெகிழ்வுத் தன்மையை இழத்தல், மூட்டு நிலைப்புத்தன்மை குறைதல் போன்றவை ஏற்படுகின்றன. இதனால், தசைநார் அழற்சி (டெண்டினிடிஸ்) போன்ற அதிகப்படியான பயன்பாட்டினால் ஏற்படும் காயங்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.

முறையான ‘வார்ம்-அப்’, இயக்கத்திறன் (Mobility) பயிற்சிகள் செய்யாமல் நேரடியாக உடற்பயிற்சி செய்வதும் பெரிய தவறு. இதனால், ரத்த ஓட்டம் சரியாக வராது, மூட்டுகள் எளிதாக அசையாது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in