

ஆஸ்துமா என்பது நுரையீரல்களின் காற்றுப்பாதைகளைப் பாதிக்கும் ஒரு சுவாசப் பிரச்சினை. ஆஸ்துமாவைத் தூண்டும் சில பொருள்களுக்குக் காற்றுப்பாதைகள் ஆற்றும் எதிர்வினை யால் ஏற்படும் பாதிப்பு அது.
இந்த எதிர்வினையால், காற்றுப் பாதைகளைச் சுற்றியுள்ள தசைகள் இறுகுகின்றன; இதன் காரணமாக காற்றுப்பாதை குறுகலாவதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் உபரியாகச் சுரக்கும் சளி காற்றுப்பாதையை மேலும் சுருங்கச் செய்கிறது.
அறிகுறிகள்
மூச்சுத்திணறல், இளைப்பு, கடுமையான இருமல், நெஞ்சில் இறுக்கம், பதற்றம் போன்றவை அறிகுறிகள். இவற்றை முன்கூட்டியே அடையாளம் கண்டால், ஆஸ்துமா ஏற்படுவதைத் தடுக்க முடியும். ஆஸ்துமா பாதிப்பு கடுமையான நிலையான நிலையை எட்டினால், உயிர்சார்ந்து அவசர நிலையை ஏற்படுத்தி விடும்.
ஆஸ்துமா நோயாளர்கள் மருத்துவர்கள் ஆலோசனைப்படி இன்ஹேலர் மருந்துகளை முறையாக எடுத்து வந்தால், ஆஸ்துமா தாக்குதல் ஏற்படும் சாத்தியம் குறைந்துவிடும்.