

ஆரோக்கியம் என்பது நோய்கள் அல்லது பலவீனம் இல்லாத நிலை மட்டுமல்ல, அது முழுமையான உடல், மன, சமூக நல்வாழ்வின் நிலை என்கிறது உலக சுகாதார நிறுவனம் (WHO). இதில் உடல் ஆரோக்கியம் என்பது நோய் நொடியின்றி உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது, சரியான உணவு, உடற்பயிற்சியை உள்ளடக்கியது.
மன ஆரோக்கியம் என்பது எதிர்மறை சிந்தனை, மன ஆரோக்கியம், மன அழுத்தத்தைக் கையாளுதல். சமூக ஆரோக்கியம் என்பது பிறருடன் நல்லுறவைப் பேணுதல், சமுதாயத்தில் இணைந்து செயல்படுதல்.
பொது சுகாதார வழிகாட்டி
உலகின் ஆரோக்கியத்தைக் காக்க 1948 ஏப்ரல் 7இல் தொடங்கப்பட்ட உலக சுகாதார நிறுவனம், உல கெங்கும் உள்ள மக்களின் ஆரோக்கி யத்தை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
தொற்றுநோய்கள் (கோவிட் 19, போலியோ, மலேரியா) பரவுவதைத் தடுத்தல், சுகாதாரத் தரம் நிர்ணயித்தல், சுகாதாரக் கொள்கை களை உருவாக்குவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இவை மட்டுமல்லாமல் மூன்று முக்கியமான பணிகளையும் அது செய்கிறது.
1. நோய்க் கட்டுப்பாடு: தொற்று நோய்கள், தொற்றாத நோய் களைக் (புற்றுநோய், நீரிழிவு) கட்டுப்படுத்த நாடுகள் தங்களுக் குள் ஒத்துழைக்க வழிவகை செய்கிறது.
2. சுகாதார அவசர நிலைகள்: உலகளாவிய சுகாதார அவசரநிலை (Pandemic) ஏற்படும்போது, அதை எதிர்கொள்ள தொழில்நுட்ப வழிகாட்டுதல் களை வழங்குகிறது.
3. தடுப்பூசி, கொள்கைகள்: நாடுகள் தங்கள் குடிமக்களுக்குத் தரமான மருத்துவ வசதி, தடுப் பூசிகளை உறுதிசெய்ய வழி காட்டுதல்களை வழங்குகிறது.