குழந்தைகளைத் தாக்கும் கிட்டப்பார்வை

உலகப் பார்வை நாள்: அக். 8
குழந்தைகளைத் தாக்கும் கிட்டப்பார்வை
Updated on: 
3 min read

திறன்பேசியில் விளையாடாத குழந்தைகளே இன்றைக்கு இல்லை. திறன்பேசியில் குழந்தைகள் என்னவெல்லாமோ செய்வதைப் பார்த்து, அவர்களைக் கொண்டாடும் பெற்றோரும் அதிகம். அந்தக் குழந்தைகள் எதிர்நோக்கியிருக்கும் மாபெரும் சவால், கிட்டப்பார்வைக் கோளாறு.

பள்ளியில் ஒரு குழந்தை வெற்றிகரமான மாணவராகத் திகழ்வதில் கண் பார்வை முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், அமெரிக்காவில் உள்ள ஒரு ஆப்டோமெட்ரி கல்லூரி நடத்திய ஆய்வு, சுமார் 25% குழந்தைகளுக்குப் பார்வை சார்ந்த பிரச்சினைகள் இருப்பதாகச் சொல்கிறது. கண் மருத்துவ நிபுணர்கள் பள்ளிக் குழந்தைகளின் கண் நலம் குறித்து அதிகம் குறிப்பிடுவது, ஒளிக்கதிர் சிதறல் பிழை (Refractive Errors) எனப்படும் பார்வைத்திறன் குறைபாடு பற்றித்தான்.

பார்வைத்திறன் குறைபாட்டில் குழந்தைகளை அதிகம் பாதிப்பது கிட்டப்பார்வைக் குறைபாடு. ஆங்கிலத்தில் மயோபியா (Myopia and Short Sightedness). பொதுவாக ஒரு பொருளைப் பார்க்கும்போது, அதிலிருந்து வரக்கூடிய ஒளிக்கதிர்கள் கண்ணின் முன்புறம் கார்னியாவில் குவிந்து, லென்ஸ் வழியாகச் சென்று விழித்திரையிலே பிம்பம் பதிவாகி, அங்கேயிருந்து சமிக்ஞைகளாக மாற்றப்பட்டு, பார்வை நரம்பு வழியாக மூளையைச் சென்றடைகிறது.

அந்தப் பொருளின் அமைப்பு, இருக்குமிடம், அசைவது போன்ற விவரங்களை மூளை பார்வையாக வெளிப்படுத்துகிறது. ஆனால், ஒளிக்கதிர்கள் விழித்திரையில் சரியாகப் பதிவாகாமல் விழித்திரைக்கு முன்பே பதிவானால் அது கிட்டப்பார்வைக் குறைபாடு. இதனால், அருகில் உள்ள பொருள்கள் தெளிவாகத் தெரியும், தூரத்தில் உள்ள பொருள்கள் தெளிவாகத் தெரியாது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in