திறன்பேசி தரும் அழுத்தம் | உள்ளங்கையில் ஒரு சிறை 18

திறன்பேசி தரும் அழுத்தம் | உள்ளங்கையில் ஒரு சிறை 18
Updated on
3 min read

ஒருவர் கடைக்குச் சென்று மளிகைப் பொருள்கள் வாங்கிவிட்டு வெளியே வந்தார். வந்தவுடன் எதையோ விட்டுவிட்டு வந்த உணர்வு ஏற்பட்டது. அடுத்த மைக்ரோ விநாடி தனது சட்டைப் பையைப் பார்த்தார். திறன்பேசியைக் காணவில்லை. பதறிய இதயம் ஒரு நொடி துடிக்க மறந்தது.

பின்னர் பேன்ட் பாக்கெட்டைத் துழாவினார். அங்கே இருந்தது. திரைப்படங்களில் கடைசி நொடியில் வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்தபின் கதாநாயகர்கள் பெருமூச்சு விடுவதைப் போலப் பெருமூச்சு விட்டபடி நிம்மதியானார். வாசல் கதவைத் திறந்த மனைவி கேட்டார்.

“உங்களோட கடைக்கு வந்த நம்ம குழந்தை எங்கே?” நோ மோ ஃபோபியா (No Mo Phobia) என்பது மொபைல் இல்லையென்றால் வரும் பதற்றத்தைக் குறிக்கிறது (No mobile). மொபைல் இல்லாமல் போவது மட்டுமல்ல, அதன் சார்ஜ் குறைந்தாலே அணைந்துவிடுமோ என்று பதற்றம் ஏற்படுவதையும் இது குறிக்கிறது.

சிலருக்கு சார்ஜ் 99% ஆனாலே கைகால் நடுக்கம் ஏற்படுகிறது. போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்களுக்கு அப்பொருள் இல்லையென்றால் உடலில் ஏற்படும் நடுக்கம் போன்ற எதிர்வினைகளைப் (withdrawal symptoms) போலவே சூதாட்டம், அதீத திறன்பேசி பயன்பாடு ஆகிய பழக்கங்களுக்கு அடிமையானவர்களுக்கும் எதிர்வினைகள் ஏற்படும் எனப் பார்த்தோம். மூளை டோபமின் வேண்டும் எனக் கதறித் துடிப்பதுதான் இதற்குக் காரணம்.

ஃபோமோவுக்குக் காரணம்: போதைப் பொருள்களுக்கு அடிமையான வர்களுக்கு இந்த டோபமின் சுரப்பு மட்டுமே காரணம். ஆனால், மொபைல் பயன்படுத்து பவர்கள் அது இல்லையென்றால் பதறுவதற்கு மேலும் சில காரணங்கள் இருக்கின்றன.

முதலாவதாக மந்திரக் கதைகளில் வரும் மாயாவியின் உயிர் ஏழு கடல், ஏழு மலை தாண்டி ஒரு கிளியிடம் இருப்பதுபோல், நம் உயிரே நமது திறன்பேசிகளிடம் இருப்பதற்குக் காரணம் எல்லாமே அதில் அடங்கியிருப்பதுதான்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in