

‘எதிர்உயிரிக்கு எதிர்ப்பாற்றல்’ (Antimicrobial Resistance - AMR) போக்கை மட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், 2050ஆம் ஆண்டு அளவில் எதிர்உயிரிக்கு எதிர்ப்பாற்றல் காரணமாக ஆண்டுதோறும் 1 கோடி பேர் இறப்பார்கள் என்று கருதப்படுகிறது. 2019இல் எதிர்உயிரிக்கு எதிர்ப்பாற்றல் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 12.7 லட்சம்.
எதிர்உயிரிக்கு எதிர்ப்பாற்றல் என்பது பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, ஒட்டுண்ணி போன்றவற்றால் தொற்று ஏற்பட்டால் சிகிச்சைக்குத் தரப்படும் எதிர்உயிரி மருந்துகளுக்கு எதிராக நம் உடலில் எதிர்ப்பாற்றல் உருவாகும் ஒரு நிகழ்வு. இது உலகளாவிய மருத்துவ அச்சுறுத்தல். எதிர்உயிரிக்கு எதிர்ப்பாற்றல் மனிதகுலம் எதிர்கொள்ளும் முதல் பத்து உலகளாவிய மருத்துவ அச்சுறுத்தல்களில் ஒன்றாக உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவித்துள்ளது.