

நீர்க்கட்டி என்று பொது வாகச் சொல்லப்படும் 'PCOD’ (Poly cystic ovarian Disease) நோய், ஹார்மோன்களின் உற்பத்தியிலும் செயலிலும் மாற்றத்தை ஏற்படுத்துவ தால் உருவாகிறது. இதன் மேம்பட்ட நிலை ‘PCOS’ (poly cystic ovarian syndrome) எனப்படுகிறது. இதில் உடல் உறுப்புகளின் தாக்கமும் இருக்கும்.
மே 2026 முதல் 'PCOS’ என்கிற அடையாளப்படுத்துதல் மாறி 'PMOS’ என அழைக்கப் படுகிறது. ‘Polyendocrine Metabolic ovarian syndrome என்பதன் சுருக்கமே PMOS. நீர்க்கட்டி (cyst) என்கிற சொல் இதில் நீக்கப் பட்டுள்ளது.
காரணம், ஏற்கெனவே சொன்னதுபோல் இதில் மற்ற உறுப்புகளின் தாக்கமும் இருப்பதால், அதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் வெறும் நீர்க்கட்டி என்கிற அளவிலேயே நம் புரிதல் இருக்கக் கூடாது என்பதுதான்.
அதற்குப் பதிலாக ‘polyendocrine, Metabolic’ போன்ற புதிய சுட்டும் முறை மே 2026 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ‘Polyendocrine metabolic’ என்றால் பல்வேறு நாளமில்லாச் சுரப்பி களின் வளர்சிதை மாற்றம் எனப் பொருள்.