உயர் ரத்தஅழுத்தம் கட்டுக் குள் இல்லாவிட்டால் இதயம், மூளை, சிறுநீரகம் ஆகிய முக்கிய உறுப்புகளில் பல நோய்களுக்கு வாசல் திறந்துவிடும். உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க மருத்துவர்கள் ஆலோசனைப்படி தொடர்ந்து சிகிச்சையை பெற்றுக் கொள்ளவேண்டும். .அத்துடன் உணவுக் கட்டுப்பாடு மூலம் உயர் ரத்தஅழுத்த நோய் அதிகரிக்காமல் இருக்கவும் முயலலாம். எப்போதும் உப்பு அதிகம் உள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். அதேபோல நாள்தோறும் உப்பின் அளவையும் குறைத்துக் கொள்ள வேண்டும். சிப்ஸ், ஊறுகாய், உப்பு, வற்றல், கருவாடு, உப்புக்கண்டம் போன்றவற்றைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். உப்பு அதிகம் உள்ள நொறுவைகளும் தவிர்க்க வேண்டியவைதான். .உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப் படி தினசரி 4-5 கிராம் உப்பு போதுமானது. ஆனால், இந்தியாவில் உள்ள பல உணவு வகைகளில் 10-12 கிராம்வரை உப்பு சேர்க்கப்படுகிறது.குறிப்பாக, அசைவ உணவு வகைகளில் காரம், உப்பு, மசாலா தூக்கலாகவே இருக்கும். இவற்றைத் தவிர்க்க வேண்டும் அல்லது குறைத்துக்கொள்ள வேண்டும். அதேநேரத்தில் கொழுப்பு அதிகமுள்ள ஆட்டிறைச்சி உள்ளிட்டவற்றைத் தவிர்ப்பது நல்லது. கொழுப்பு குறைவான கோழி இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றைச் சாப்பிடலாம். அவற்றையும் எந்த அளவில் சாப்பிட வேண்டும் என்பதை ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரையின்பேரில் பின்பற்றுவது நல்லது..எதிர்கொள்ளலைக் குறைக்கும் பயனுள்ள தீர்வுகள் | காடு என்ன சொல்கிறது? - 19