

ரத்த தானம் என்பது தன்னலமற்ற ஓர் உன்னதமான செயல், மனித குலத்தின் மாபெரும் சேவை. செயற்கையாக உருவாக்க முடியாத ரத்தத்தை, தேவைப்படும் நோயாளர்களுக்குத் தந்து, அவர்களின் உயிரைக் காப்பாற்றுவதே ரத்த தானத்தின் முக்கிய நோக்கம். இது ஒரு மனிதர், சக மனிதருக்குச் செய்யும் மிகச் சிறந்த உதவி.
யாருக்குத் தேவைப்படும்?
பொதுவாக எல்லா நோயாளர்களுக்கும் ரத்தம் தேவைப்படுவதில்லை. அந்த வகை யில் தேவைப்படுவோரை வரையறுக்கலாம்.
* கடுமையான ரத்த சோகை, ஹீமோகுளோபின் அளவு 7க்குக் குறைவாக இருக்கும்போது ரத்தம் தேவைப்படலாம்.
* பலத்த காயங்கள், அறுவைசிகிச்சையில் அதிகப்படியான ரத்த இழப்பு ஏற்படும் போது.
* புற்றுநோய் சிகிச்சையின்போது.
* மரபணுக் கோளாறு, தலசீமியா அல்லது ஹூமோபிலியா போன்ற பரம்பரை ரத்தக் கோளாறு உள்ளவர்கள்.
* பிரசவத்தின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்படும்போது.
* உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு அறுவைசிகிச்சைகளின்போது.