அடிமையாக்கும் மகிழ்ச்சி! | உள்ளங்கையில் ஒரு சிறை 09

அடிமையாக்கும் மகிழ்ச்சி! | உள்ளங்கையில் ஒரு சிறை 09
Updated on
2 min read

ஒரு விஷயத்துக்கு அடிமையாவது என்பது மது, கஞ்சா போன்ற போதைப் பொருள்களுக்கு (substance addiction) மட்டும்தான் எனப் பலரும் நினைத்துக் கொண்டி ருந்தனர். ஆனால், ஒரு செயலுக்கும் அடிமையாக முடியும். இது ‘Behavioural addiction’. போதைப் பொருள்களுக்கு அடிமையாவது போன்றே செயல்பாட்டுக்கு அடிமையாவதற்கும் அறிகுறிகள் இருக்கின்றன. அதே போன்றுதான் மூளையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

ஒரு போதைப் பொருளைப் பயன்படுத்தும்போது மூளை யின் பரிசுப் பகுதியில் வேதிமாற்றங்களை அது ஏற்படுத்து கிறது. அதனால், அதை மீண்டும்மீண்டும் பயன்படுத்துகிறார்கள். இதை ஒரு பழக்கமாகவும் ஆக்கிக்கொள்கிறார்கள்.

அதேபோல் நமக்கு மகிழ்ச்சி தரக்கூடிய, ஆவலைத் தூண்டக்கூடிய செயல்களையும் மீண்டும்மீண்டும் செய்யப் பழகிக் கொள்கிறோம் என்று பார்த்தோமல்லவா? இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும். பழக்கம் (Habit) எப்படி உருவாகிறது, அடிமையாவது என்றால் என்ன என்பதை எல்லாம் மூளை அறிவியல் சார்ந்த உளவியல் பார்வையில் பார்ப்போம்.

கவனக்குவிப்பு: ஒரு செயலை முதல் முறையாகச் செய்வ தற்கும் அச்செயல் நமக்குப் பழக்கமான பிறகு செய்வதற்கும் மூளையில் ஏற்படும் மாற்றங்களில் வித்தியாசங்கள் இருக்கின்றன. முதல் முறையாக கார் அல்லது பைக் ஓட்டக் கற்றுக்கொள்ளும்போது, நம் கவனம் முழுவதும் அதில்தான் இருக்கும். பக்கத்தில் இருப்பவர் ஏதாவது பேசினால்கூடக் கேட்காது. நாம் வண்டி ஓட்டிக்கொண்டு போகும்போது எதிரே சச்சின் டெண்டுல்கரோ சாய்பல்லவியோ வந்தால்கூடக் கவனிக்க மாட்டோம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in