

ஒரு செயல் நம் கவனத்தைச் சிதறடிக்கிறது. அதனால், வேலை கெடுகிறது என்று தெரிந்தும் ஏன் அதைத் தொடர்ந்து நாம் செய்கிறோம்? இதைப் புரிந்துகொள்ள மனிதர்கள் எப்படிப் போதைப் பொருளுக்கு அடிமையாகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மது, கஞ்சா போன்ற பொருள்கள் தரும் தீமைகள் அதிகம். இது அவற்றைப் பயன்படுத்தும் அனைவருக்குமே தெரியும். என்றாலும் அவற்றைத் தொடர்ந்து உட்கொண்டபடியே இருப்பது ஏன்? இதை அறிய நாம் மீண்டும் மனித மூளையின் இணைப்புகளுக்குச் செல்ல வேண்டும்.