

மருத்துவமனைகளில் அடிப்படையாகப் பார்வைத் திறனைப் பரி சோதிப்பதில் தொடங்கி, ‘நம் சிகிச்சை நம் உரிமை’ என்பதுவரை வலியுறுத்தி எழுதப்பட்டிருக்கும் நூல் இது. கண்ணில் அடிக்கடி ஏற்படும் சிறிய பிரச்சினைகளில் தொடங்கி முக்கியமான பிரச்சினைகளையும் இந்த நூல் அலசுகிறது. மருத்துவ விவரங்களைச் சுவாரசியமாகவும் எளிமையாகவும் மக்களிடம் கொண்டுசேர்ப்பது ஒரு கலை. நூலாசிரியர் மருத்துவர் அகிலாண்ட பாரதி அதைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்.
கண்ணைக் கட்டி கொள்ளாதே
டாக்டர் எஸ்.அகிலாண்டபாரதி,
சந்தியா பதிப்பகம்,
தொடர்புக்கு: https://www.sandhyapublications.com
மனிதன் அறியத் துடிக்கும் பல புதிர்களில் மனமும் ஒன்று. மனம் எப்படிச் செயல்படுகிறது, எண்ணங்கள் எங்குத் தோன்றுகின்றன, உணர்ச்சிகள் ஏன், எப்படி உருவாகின்றன, அவற் றைக் கட்டுப்படுத்துவது எப்படி எனப் புரிதல்களைத் தருகிறது இந்த நூல். குறிப்பாக நினைவுகள் எப்படி, எங்கே உருவாகின்றன, அவற்றுக்கும் உணர்ச்சிகளுக்கும் என்ன தொடர்பு என்று எழும் கேள்விகளுக்கு நூல் பதிலளிக்கிறது.
மூளை மனம் மனிதன்
டாக்டர் ஜி.ராமானுஜம்,
உயிர்மை பதிப்பகம்,
தொடர்புக்கு: 044 48586727