சமூக ஊடகமும் ஒரு சூதாட்டமா? | உள்ளங்கையில் ஒரு சிறை 11

சமூக ஊடகமும் ஒரு சூதாட்டமா? | உள்ளங்கையில் ஒரு சிறை 11
Updated on
2 min read

திறன்பேசிகள் கவனத்தைக் குவிக்கவிடாமல் செய்கின்றன எனப் பார்த்தோம். புதிதாக ஏதோ ஒன்று வரப்போ கிறது என்பதை எதிர்பார்த்து அச்செயலைச் செய்துகொண்டே இருக்கிறோம்.

இதைச் செய்வதில் முதன்மையாக இருப்பவை திறன்பேசிகளின் அறிவிப்புகள்தான் (notifications). ஒவ்வொரு முறை ஒரு நோட்டிஃபிகேஷேன் வரும் போதும் ஏதோ ஒன்று நம்மை உந்துகிறது.

இவ்வாறு நம்மை அடிமை ஆக்குவதில், இந்த அறிவிப்புகளின் இரண்டு பண்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாகச் சமூக ஊடகங்களை அதிகம் பயன் படுத்துவதற்கு முக்கியக் காரணமாக இவை உள்ளன.

அவை இரண்டும் என்ன? கால் நியூபோர்ட் (Cal Newport) என்னும் உளவியலாளர் அதீதத் திறன்பேசி பயன்பாட்டால் வரும் ஆபத்துகளை விளக்கி டிஜிட்டல் மினிமலிசம் (Digital Minimalism) என்றொரு நூலை எழுதியிருக்கிறார். அதில் அவர் இந்த இரண்டு பண்புகளை விளக்குகிறார்.

அவை:

1. அறிவிப்புகளின் நிச்சயமற்ற தன்மை – எப்போது வரும் எனக் கணிக்கமுடியாத தன்மை

2. சமூக அங்கீகாரம் – சமூக ஊடகங்களில் கிடைக்கும் லைக், ஹாட்டின் போன்ற விருப்பக்குறிகள்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in