இன்சுலின் ஊசி தேவையற்றதா? | மறையாத கட்டுக்கதைகள் 07

இன்சுலின் ஊசி தேவையற்றதா? | மறையாத கட்டுக்கதைகள் 07
Updated on
3 min read

மு வகை நீரிழிவை இன்சுலின் இல்லாமல் குணப்படுத்தலாம் என்கிற தவறான கற்பிதம் சமூகத்தில் நிலவி வருகிறது. இதை நம்பி முதல் வகை நீரிழிவு நோயுள்ள குழந்தைகளுக்கும் சிறார்களுக்கும் இன்சுலினை நிறுத்திவிடுவதால், பாதிப்பைச் சந்திக்கிற சூழல் இருக்கிறது.

நீரிழிவில் இரண்டு வகை உண்டு. முதல் வகை, இன்சுலின் உற்பத்தி தேவையான அளவு இல்லாத நிலை. இந்நோயர்களுக்கு வெளியி லிருந்து ஊசி மூலம் இன்சுலினை செலுத்தியாக வேண் டும். இரண்டாவது, இன்சுலின் சுரப்பு நன்றாக இருந்தாலும், அது சரியாக அதன் பணியைச் செய்யாது. இதற்கு இன்சுலின் எதிர்ப்பு நிலை என்று பெயர்.

பெரும்பான்மையினருக்குக் குழந்தைப் பருவம் அல்லது வளரிளம் பருவத்தில் கண்டறியப்படும் குறைபாடே முதல் வகை. அதனால்தான் இதை ‘Juvenile Diabetes’ (குழந்தைப் பருவத்தில் வரும் நீரிழிவு) என்கிறோம்.

அரிதாக, வளர்ந்த பருவத் தினரிடமும், முதல் வகை நீரிழிவு கண்ட றியப்படலாம். இதை ‘ஆட்டோ இம்யூன் டயாபடிஸ் இன் அடல்ட்ஸ்’ என்கிறோம். இரண்டாம் வகை நீரிழிவு பெரும்பாலும் மத்திய வயதினருக்கு ஏற்படுகிறது.

முதல் வகைக்கான அறிகுறிகள்

உடல் எடை திடீரெனக் குறைந்து மெலிதல், தளர்வு, சோர்வு, தொடர்ந்து நோய்த்தொற்று ஏற்படுவது, பிறப்புறுப்பில் புண் ஏற்படுவது, ஆறாத காயம், அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதீதப் பசி உணர்வு, நன்றாகச் சாப்பிட்டாலும் எடை கூடாமல் இருப்பது போன்றவை அறிகுறிகள்.

ஒரு வைரஸ் தொற்று ஏற்பட்டு, காய்ச்சல் அடித்து அதிலிருந்து குணமான பிறகு, திடீரென அந்த வைரஸின் தாக்கத்தால் கணையத்தின் பீட்டா செல்கள் பாதிக்கப்பட்டு முதல் வகை நீரிழிவு ஏற்படலாம். ஆம், முதல் வகை நீரிழிவில் ஒருவரது உடலில் உள்ள கணையம் இன்சுலினைச் சுரக்காது அல்லது போதுமான அளவு இன்சுலின் உற்பத்தி இருக்காது.

கணையத்தின் பீட்டா செல்களுக்கு எதிராக உடலின் எதிர்ப்பு சக்தி செயல்படும். எனவே, முதல் வகை நீரிழிவு, தன்னுடல் தாக்கு (ஆட்டோ இம்யூன்) நோய் என்று வகைப்படுத்தப்படுகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in