

இன்றைய புத்தியல்பு வாழ்க்கையில், ‘நேற்று நடந்தது நன்றாக நினைவிருக்கிறது. ஆனால், சற்று முன்னர் சொன்ன விஷயத்தை மறந்துவிட்டேன்!’ என்று 60 வயதுக்காரர்கள் சொல்லத் தொடங்குகிறார்கள்.
‘வயதாகிறதே... அதனால் வரும் மறதிதான்’ என்று பலரும் அதைச் சாதாரணமாகக் கடந்துசெல்கிறோம். சிலர் மருத்துவரிடம் செல்கிறார்கள்.
ஆனால், மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டிய சரியான நேரம், மறதி தொடங்கிய பிறகு அல்ல; அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே செய்தாக வேண்டும்!
குடும்ப வரலாற்றில் இளம் வயதிலேயே தொடங்கும் மறதி நோய் (Dementia) 52 வயதான நிர்வாக அதிகாரி ஒருவருக்கு இருந்தது. அவருக்கு அப்போது எந்த விதமான மறதிப் பிரச்சினையும் இல்லை.
ஆனால், வழக்கமான முழு உடல் பரிசோதனையில் உயர் ரத்த அழுத்தம், அதிக அளவில் கெட்ட கொழுப்பு (LDL), ஆரம்பநிலை இன்சுலின் எதிர்ப்பு ஆகியவை எல்லைக்கோட்டில் இருந்தன. நீண்ட நேரம் உட்கார்ந்தபடியே பணிபுரியும் வாழ்க்கைமுறையும் அவரிடம் இருந்தது.