

# குளிர்காலத்திலும் மழைக்காலத் திலும் வீரியத்தைக் காட்டும் ஆஸ்துமா, வயது வித்தியாசமின்றி யாருக்கும் வரக்கூடிய ஒரு நோய். இந்தியாவில் சுமார் 3.5 கோடி பேருக்கு ஆஸ்துமா நோய் இருப்ப தாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
# ஒருவருக்கு அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை பிரச்சினை இருந்தால், அந்த ஒவ்வாமை தொடர்ந்து தூண்டப்படும்போது ஆஸ்துமா வுக்கு வழிவகுக்கிறது. ஒவ்வாமை ஏற்பட உணவு, தூசி, புகை, தொழிற் சாலைக் கழிவுகள், மருந்துகள் என எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம்.
# அடிக்கடி சளி பிடிப்பது, அடுக்குத் தும்மல் பிரச்சினை, மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, வறட்டு இருமல் போன்ற பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடக் கூடாது. முறையாகச் சிகிச்சை பெறாமல் விட்டுவிட்டால் ஆஸ்துமா வரலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
# நுரையீரலில் உள்ள சுவாசக்குழல் தசைகள் சுருங்குவதாலும், சுவாசக்குழலின் உள்சவ்வு வீங்குவதாலும் காற்று செல்லும் பாதை சுருங்கக் கூடும். அந்தச் சவ்விலிருந்து நீர் சுரப்பதால் சுவாசப்பாதை மேலும் அடைப்பட்டு, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது.