

பொதுவாகப் படுக்கைக்குச் செல்வதற்கு இரண்டு மணி நேரம் முன்பாக இரவு உணவை முடித்துவிட அறிவுறுத்தப்படுகிறது. சாப்பிட்டுவிட்டு உடனே படுத்தால் எதுக்களித்தல், நெஞ்செரிச்சல் போன்ற அசெளகரியம் ஏற்படும் என்பதே காரணம். நெஞ்செரிச்சல் ஏற்பட மேலும் சில காரணங்கள் இருக்கின்றன.
நெஞ்செரிச்சல் என்பது மார்புப் பகுதியில் ஏற்படும் ஓர் எரிச்சல் உணர்வு. வயிற்றில் உள்ள அமிலம் உணவுக் குழாய் நோக்கி மேலே வரும்போது இது மிகுந்த வலியை ஏற்படுத்தும். வயிற்று அமிலம் மேலே தொண்டைப் பகுதிக்கு வரும் நிலைக்கு ‘அமில மேல்நோக்கி வருதல் (Acid reflux) என்று பெயர்.