

வெலிங்டன் கண்டோன்மெண்ட் பகுதியில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. செலவில்லாத சொட்டு நீர்ப் பாசன முறையில் மரக்கன்றுகளுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் பாளைய வாரியப் பகுதி அமைந்துள்ளது. ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தப் பகுதியில் பசுமைப் பரப்பை அதிகரிக்க மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மரக்கன்றுகளைப் பராமரிக்கும் பணி கடினமானதாக இருப்பதால், செலவில்லாத சொட்டு நீர்ப் பாசன முறையை வெலிங்டன் பாளைய வாரிய நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.