ஃபேட்டி லிவர்: அலட்சியம் வேண்டாம் | மறையாத கட்டுக்கதைகள் 23

ஃபேட்டி லிவர்: அலட்சியம் வேண்டாம் | மறையாத கட்டுக்கதைகள் 23
Updated on
3 min read

அண்மையில் என்னைச் சந்தித்த ஒருவருக்கு ‘கல்லீரல் அழற்சி நோய்’ (Cirrhosis) கண்டறியப்பட்டது. அவருக்கு மது அருந்தும் பழக்கம் எப்போதும் கிடையாது. புகை, பிற போதைப் பொருள்களைத் தொடாத ‘டீடோட்டலர்’. எனினும் அவருக்குக் கல்லீரல் நோய் எப்படி வந்தது? மது அருந்துவதால் மட்டுமே கல்லீரல் நோய் வருகிறது என்று எண்ணும் வழக்கம் நம்மிடையே உள்ளது. இது மூடநம்பிக்கை.

இந்தியாவில் மதுவால் கல்லீரல் செயலிழப்பு ஏற்படுவோரைவிட, மது அல்லாத கல்லீரல் நோயால் பாதிப்பு அடைபவர்கள் அதிகமாகி வருகின்றனர். கல்லீரல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்காகக் காத்திருப்போர் பட்டியலில் ‘மது’வைத் துளிகூடத் தீண்டாதோர் பெரும்பான்மையாக உள்ளனர். எனவே, எனக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை.

ஏன் கல்லீரல் நோய் வந்தது? என்று ஏதுமறியாமல் அல்லது அறிந்தும் அதைப் பற்றி அக்கறையின்றி இனி இருக்க இயலாது. மதுவைப் பருகும்போது அதன் வேதியியல் மூலப்பொருளான எத்தில் ஆல்கஹாலைக் கல்லீரல் மட்டுமே வளர்சிதை மாற்றத்துக்கு உட்படுத்துகிறது.

அதனால், மது கல்லீரலைச் சிதைக்கிறது என்பதை அறிவோம். ஆனால், மாவுச்சத்தை (கார்போஹைட்ரேட்ஸ்) அளவுக்கு அதிகமாகச் சாப்பிடும்போது, அது வளர்சிதை மாற்றத்துக்கு உட்பட்டுக் கொழுப்பாக உடலில் சேமிக்கப்படுகிறது.

கல்லீரல் கொழுப்பு

தேவைக்கு மிகுதியாக உட்கொள்ளப்படும் மாவுச்சத்து, கொழுப்பு செல்களாகத் தோல் களுக்கு அடியில் கொழுப்புத் திசுவாக முதலில் சேமிக்கப்படும். பிறகு, வயிற்றுப் பகுதியில் தொப்பையாகச் சேரும். இதே கொழுப்பு, உள்ளுறுப்பான கல்லீரலிலும் சேரத் தொடங்குகிறது.

எதேச்சையாக வயிற்றுப் பகுதி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்கள் செய்யப் படும்போது ‘ஃபேட்டி லிவர்’ கண்டறியப்படுகிறது. இந்தியர்களில் மூவரில் ஒருவருக்கு ஃபேட்டி லிவர் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சமூகத்தில் பலருக்கும் இருப்பதால் அது இயல்பானது என்று எண்ணிவிடக் கூடாது. ஃபேட்டி லிவர் என்பது ‘நார்மல்’ அல்ல. அது ஒரு நோய்.

கல்லீரல் நோய் என்று அணுகுவதும் தவறு. மாறாக உடலின் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் பாதிப்பு. குறிப்பாக, மாவுச்சத்தின் வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் விளைவு என்று அணுகினால்தான், அதிலிருந்து விடுபடுவதற்கு வழி கிடைக்கும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in