சின்னம்மைக்குச் சிகிச்சை தேவை இல்லையா? | மறையாத கட்டுக்கதைகள் 03

சின்னம்மைக்குச் சிகிச்சை தேவை இல்லையா? | மறையாத கட்டுக்கதைகள் 03
Updated on
3 min read

பொதுவாகச் சின்னம்மைக்கு எந்த மருத்துவச் சிகிச்சையும் தேவையில்லை என்கிற கற்பிதம் சமூகத்தில் இன்னும் நிலவிவருகிறது. தற்போதைய வெயில் காலத்தில் குழந்தைகள், பெரியவர்கள் சின்னம்மைத் தொற்றுக்கு உள்ளாகி வருவதைக் காண்கிறோம்.

‘Chich-Pois’ என்கிற பிரெஞ்சு மொழிச் சொல்லுக்கு ‘பச்சைப் பட்டாணி’ (Chick peas) என்று பொருள். சின்னம்மை ஏற்படும்போது உடல் முழுவதும் பச்சைப் பட்டாணி அளவில் கொப்புளம் தோன்றியதால் சிக் பீ என்பது சிக்கன் என்று மருவி அதனுடன் பாக்ஸ் சேர்க்கப்பட்டு அழைக்கப்பட்டது. மற்றபடி சிக்கனுக்கும் சின்னம்மைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

சின்னம்மை எனும் சிக்கன் பாக்ஸ், ‘வேரிசெல்லா ஸோஸ்டர்’ வைரஸ் மூலம் உண்டாகும் தொற்று நோய். காற்றின் மூலம் பரவும். தொற்றுக்கு உள்ளானவர் தும்மி னாலோ இருமினாலோ அருகில் இருப்பவருக்கு எளிதில் பரவிவிடும்.

கொப்புளங்கள் தோன்றும் நிலை வரும்போது தோலோடு தோல் உரசு வதாலும் தொற்றுப் பரவும். அறிகுறி கள் தெரிய சராசரியாக இரண்டு வாரங்கள் எடுக்கும். காய்ச்சல், உடல் சோர்வு, தொண்டைவலி, தலைவலி போன்ற தொந்தரவுகள் 5 முதல் 7 நாள்கள் இருக்கும்.

பின்னர் உடல் முழுவதும் சிவப்பு நிறப் படை தோன்றி நெஞ்சுப் பகுதி, பின்புறம், முகம் எனக் கொப்புளங்கள் ஏற்பட்டு, உடல் முழுவதும் பரவும். இரண்டாவது வார முடிவில் கொப்புளங்கள் காய்ந்து விழுந்துவிடும். கொப்புளங்கள் தோன்றுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பிலிருந்து காய்ந்து விழும்வரை பிறருக்குத் தொற்றுப் பர வும் நிலையில் இருக்கும்.

என்னென்ன பிரச்சினை?

பொதுவாகக் குழந்தைகளுக்கு இத்தொற்று ஏற்பட்டால் பெரிய பாதிப்புகள் இன்றி மறையும் என்பது உண்மையே. ஆனால், வளர் இளம் பருவத்தினர், வயது வந்தோர், முதியோர், கர்ப்பிணிகள், எதிர்ப்பு சக்தி குன்றியோர்க்கு ஏற்படும்போது நோய் தீவிரமாக வெளிப்படும்.

முறையாகச் சிகிச்சை அளிக்காவிட்டால் சிலருக்கு நிமோனியா எனும் தீவிர நுரையீரல் தொற்று, ‘என்செஃபாலைட்டிஸ்’ எனும் மூளை அழற்சி, கொப்புளங்களில் பாக்டீரியா தொற்று ஏற்படலாம். சின்னம்மைக்கு ஏசைக்ளோவிர்/ வேல்ஏசைக்ளோவிர் ஆகிய மாத்திரைகள் சிறப்பாகச் செயல்பட்டு, நோயின் தீவிரத்தையும், நோயின் தாக்கக் காலத்தையும் குறைக்கும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in