‘பயாப்சி’யால் புற்றுநோய் தீவிரமடையுமா? | மறையாத கட்டுக்கதைகள் 09

‘பயாப்சி’யால் புற்றுநோய் தீவிரமடையுமா? | மறையாத கட்டுக்கதைகள் 09
Updated on
3 min read

தற்காலத்தில் நமது சமூகத்துக்கு அச்சுறுத்தல் தரும் முக்கியமான தொற்றா நோயாக உருவெடுத்து வருவது, ‘புற்றுநோய்’. புற்றுநோயைப் பொறுத்தவரை தொடக்க நிலையிலேயே கண்டறிவது நோயைக் குணப்படுத்து வதில் பெரும் பங்காற்றுகிறது.

ஆறாத புண்கள், திடீரென வளரும் கட்டிகள், திடீரென சருமத்தில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை புற்று நோயின் அறிகுறிகளாக இருக்கலாம். இத்தகைய சந்தேகத்திற்குரிய புண்கள், கட்டிகள் ஆகியவற்றின் திசுக்களில், செல்களில், திரவங்களில் இருந்து சிறிய அளவில் மாதிரியை எடுத்துப் பரிசோதனைக்கு அனுப்பி, நோயின் தன்மையைக் கண்டறி வதில் முக்கியப் பங்காற்றும் பரிசோத னையாக இருப்பது ‘பயாப்சி’ (Biopsy).

ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏற்பட் டுள்ள புண், கட்டிக்குக் காரணம், புற்றுநோயா, கிருமித் தொற்றா, அழற்சி நிலையா (Inflammation) என்பதை அறிவதற்கு ‘பயாப்சி’ மிக முக்கியமான பரிசோதனையாக இருக்கிறது.

பயாப்சி வகைகள்

ஊசி மூலம் எடுக்கப்படும் பயாப்சி, கட்டியின் ஒரு சிறு துண்டுப் பகுதியை மட்டும் எடுக்கும் பயாப்சி, கட்டியை முழுவதுமாக நீக்கி பரிசோதனைக்கு அனுப்பும் பயாப்சி என்று பல வகை களில் பயாப்சி செய்யப்படுகிறது.

புற்றுநோயைக் கண்டறிதல் மட்டு மல்லாமல் தன்னுடல்தாக்கு சிறுநீரக நோய்களிலும், கல்லீரல் அழற்சி நோய்களிலும், உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்ட வர்களில் உறுப்பின் நலன் குறித்து அறியவும் பயாப்சி உதவுகிறது.

என்ன செய்யப்படுகிறது?

சந்தேகிக்கப்படும் பகுதியிலிருந்து எடுக்கப்படும் சிறு திசுத்திரளில் உள்ள செல்களின் அமைப்பு ஃபார்மலின் கொண்டு நிலை நிறுத்தப்படும் (Fixation). மெழுகில் அந்தத் திசுத் திரளைப் புகுத்தி (Embedding), திடமான மெழுகு உருளை உருவாக்கப்படும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in