

எனது வயது 46. ரத்தப் பரிசோதனையில் (4.45ng/mL) விட்டமின் டி குறைபாடு உள்ளது தெரியவந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாக வெயில்படும் உடல் பாகங்களில் ‘hyperpigmentation’ உள்ளது. விட்டமின் டி குறைபாட்டுக்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? இதற்குத் தீர்வு என்ன? - ர. கவிதா, திருச்சி.
மாதவிடாய் நிற்கும் நிலையில் பெண்கள் விட்டமின் டி குறைபாட்டால் பெரிதும் பாதிக்கப் படுகிறார்கள். உங்களைப் போல குறைபாடு இருந்தும் அது தெரியாமல் இந்தியாவில் பாதிப் பெண்கள் இருக்கிறார்கள்.
வகைகள்: விட்டமின் டி, ஏர்கோகல்சிபெரோல் (Ergocalciferol) D2 என்கிற நிலையில் தாவரப் பொருள்களில் கிடைக்கும். விட்டமின் D3 கோலிகல்சிபெரோல் (Cholecalciferol) சூரிய ஒளி, மீன், முட்டை மஞ்சள் கரு, பால் பொருள்களில் கிடைக்கும்.