கோடையில் வியர்க்குரு, தோல் தடிப்பா? | நலம் வாழ கேள்வி - பதில்

கோடையில் வியர்க்குரு, தோல் தடிப்பா? | நலம் வாழ கேள்வி - பதில்
Updated on
2 min read

மகனுக்கு வயது 12. வெயில் காலத்தில் வியர்க்குரு, தோல் தடிப்புப் பிரச்சினை வந்துவிடுகிறது. இதை நிரந்தரமாகப் போக்குவது எப்படி? - ரா. விஜி, வேலூர்

கோடைக்காலத்தில் ஏற்படும் வியர்க்குரு (Prickly Heat/Miliaria), தோல் தடிப்புகள் (Rashes) போன்றவை வியர்வைச் சுரப்பிகளின் துவாரங்கள் அடைபடுவதால் ஏற்படுகின்றன. இதை மிலியாரியா (Miliaria) என்கிறார்கள்.

இது, குழந்தைகளிடம் பொதுவாகக் காணப்படும் பிரச்சினை. வியர்வை வெளியேற முடியாமல் தோலின் அடியில் தங்குவதால் சிவந்த சிறு கொப்புளங்களை (Heat Rash) அது உண்டாக்குகிறது.

ஈரப்பதம், பூஞ்சை தொற்று: கழுத்து மடிப்புகள், அக்குள்கள், தொடை இடுக்குகளில் வியர்வை அதிகமாக தங்குவதால் பூஞ்சை தொற்று (FungalInfections) ஏற்பட்டு அரிப்பு உண்டாகலாம்.

குழந்தை களுக்கு இவை அதிகம் வருவதற்கு அவர்களின் வியர்வைச் சுரப்பிகள் முழுமையாக வளர்ச்சியடையாததால், அதிக வியர்வையை வெளியேற்ற முடியாமல் எளிதில் அடைப்பு ஏற்பட்டு விடுகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in