வலியில்லாத மாரடைப்பு | நலம் வாழ கேள்வி - பதில்

வலியில்லாத மாரடைப்பு | நலம் வாழ கேள்வி - பதில்
Updated on
2 min read

வலியில்லாத மாரடைப்பு எப்படி ஏற்படுகிறது? இதற்குத் தீர்வு என்ன? - பி. கனகராஜ், மதுரை.

பொதுவாக மாரடைப்பு வலியுடன் வந்தாலும், வலியில்லாத மாரடைப்பும் சிலருக்கு ஏற்படுகிறது. வலியில்லாத மாரடைப்பையும் அதனால் ஏற்பட்ட மரணத் தையும் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரால் தாங்கிக்கொள்ள முடியாது. ஏனென்றால், இந்த மரணம் அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் நடந்திருக்கும்.

வலியில்லாத மாரடைப்புக்கு நீரிழிவு முக்கியக் காரணம். கட்டுப்படாத சர்க்கரை நோயாளிகளுக்குப் பிற பாதிப்புகளுடன் ‘கார்டியாக் ஆட்டோனாமிக் நியூரோபதி’ (Cardiac Autonomic Neuropathy - CAN) என்கிற பாதிப்பும் ஏற்படும். இது இதய நரம்புகளைப் பாதிக்கும். இதனால், மாரடைப்பு ஏற்படும்போது, அந்த வலி உணர்வு மூளைக்குக் கடத்தப்பட்டு உணரப்படுவதில்லை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in