எனக்கு வயது 79. சளி, இருமல் பிரச்சினைகள் உள்ளன. சிகிச்சை மேற்கொண்டும் தீர்வு கிடைக்கவில்லை. என் பிரச்சினைக்குத் தீர்வை சொல்லுங்கள் ஐயா? - சக்கரப்பன். தருமபுரி
சளி, இருமல் பிரச்சினைகள் உள்ள தாகவும், சிகிச்சை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள். உங்கள் மருத்துவர் தங்களது சளி, இருமலுக்கான காரணத்தைக் கண்டறிந்தாரா? அதற்கு எந்த வகை சிகிச்சை அளிக்கப் பட்டது என்பது தெரியவில்லை. இருப்பினும் தங்களது பிரச்சினை இன்னும் தீரவில்லை. இல்லையா? கேள்விக்கு பதில் தரும் முன் இருமல் எதற்காக வருகிறது எனத் தெரிந்துகொள்ள வேண்டும். ‘கறை நல்லது' என்பதைப் போல 'இருமலும் மிகவும் நல்லது'. ஏன் தெரியுமா?