

எனக்குப் பாதங்களில் எரிச்சல் அதிகமாக இருக்கிறது. இதற்குத் தீர்வு என்ன? - வீ. வெள்ளிங்கிரி, மேட்டுப்பாளையம்.
பாத எரிச்சல் ஏற்படுவற்கு மிக முக்கியக் காரணம், கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய். மது அருந்துதல், தீக்காயங்கள், புற்றுநோய் மருந்துகள், நச்சுப் பொருள்கள், விட்டமின் குறைபாடுகள் - குறிப்பாக பி12 விட்டமின் குறைபாடு, பூஞ்சைத் தொற்றுகள், ரத்த நாளம், ரத்த ஓட்டக் கோளாறுகள் - அடைப்புகள், எய்ட்ஸ், ஹைப்போ தைராய்டிசம், சிறுநீரக நோய், நரம்பு மீதான அழுத்தம் ஆகியவையும் காரணமாக இருக்கலாம்.
சர்க்கரை நோய் உள்ளவர்களில் பாதிப் பேருக்கு மேல் இந்தப் பிரச்சினை உள்ளது. சர்க்கரை நோய், பல்வேறு நரம்பியல் பாதிப்புகளையும் (Diabetic Neuropathy) ஏற்படுத்தும். இதில் முக்கிய வகை ‘பெரிஃபெரல் நியூரோபதி' எனப்படும் புற நரம்பியல் (Peripheral Neuropathy) பாதிப்பு.