

எனக்கு வயது 65. இதய நோயாளி. நீரிழிவு இல்லை. ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் உள்ளது. அண்மையில் ரத்தப் பரிசோதனை செய்தபோது கிரியாடினின் அளவு 2 எம்.ஜி/டிஎல் ஆக இருந்தது. ஸ்கேன் செய்ததில் ஒரு சிறுநீரகம் சுருங்கி விட்டதாகச் சொன்னார்கள். இதய பாதிப்பால் சிறுநீரகத்தில் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? - சீ. வசந்தா, மதுரை.
இதய நோயினால் சிறுநீரகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனை கார்டியோரீனல் சிண்ட்ரோம் (Cardiorenal Syndrome) என்று சொல்வார்கள். உங்களுக்கு இதய ரத்த நாள அடைப்பால் ஏற்பட்ட இதய நோய் (Ischaemic Heart Disease - IHD) என்று கருதுகிறேன்.
இதயம், சிறுநீரகம் இரண்டையும் நம் வசதிக்காகத் தனியாகப் படித்தாலும் அவை நெருங்கிய தொடர்புடைய உறுப்புகள்தான்! ஒன்று பாதிக்கப் பட்டால், மற்றொன்றும் பாதிக்கப்படலாம்.