

கேள்வி: என் வயது 77. கொலஸ்டிரால் மாத்தி ரையைத் (Rosuvastatin) தற்போது நிறுத்திவிட்டேன். மையால்ஜியா (myalgia), ஹைப்போ தைராய்டிசத்துக்கு எடுக்கும் மருந்தால் ஏற்படும் தசைவலி, தசை பலவீனம் ஆகியவற்றை எப்படிச் சரிசெய்வது? - வி. சுப்பிரமணியன், ஈரோடு
உங்களுக்கு தைராய்டு குறைபாடு எதனால் ஏற்பட்டது என்று தெரியவில்லை. அதாவது, ஹைப்போ தைராய்டிசம், தன்னுடல் தாக்கு நோய், அயோடின் பற்றாக்குறை, தைராய்டு அழற்சி எனப் பல காரணங்களால் ஏற்படலாம். ஹைப்போ தைராய்டிசம் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் கெட்ட கொலஸ்டிரால் (ட்ரைகிளிசரைடுகள், எல்.டி.எல்) அதிகரித்துவிடும்.
நல்ல கொலஸ்டிரால் (ஹெச்.டி.எல்) குறைந்துவிடும். உங்களுக்கு வயது முதிர்வு, பிற காரணங் களால்கூட கொலஸ்டிரால் அதிகரித்துத் தமனிக்கூழ்மைத் தடிப்பு (Atherosclerosis) ஏற்படலாம். ஒருகாலத்தில் ரத்த கொலஸ்டிரால் என்றால் மொத்த கொலஸ்டிரால் மட்டுமே தெரிந்திருந்த நிலையில், இன்று ரத்த கொலஸ்டிரால் என்றால் ஏகப்பட்ட வகைகள் வரிசைகட்டி நிற்கின்றன.