

பாட்டிக்கு 70 வயது. அவருக்கு அவ்வப்போது கால்கள் அரிக்கும். குளிர் காலத்தில் அரிப்பு அதிகமாகி விடுகிறது. அதற்காக மருத்துவ மனைக்குச் சென்று அடிக்கடி ஊசி செலுத்திக் கொள்கிறார். நிரந்தரத் தீர்வு என்ன? - ஆர்த்தி, மின்னஞ்சல் வழியாக
70 வயதாகும் முதியவர்களுக்கு நீண்டகால அரிப்பு ஏற்படச் சாத்தியம் அதிகம். முதுமையில் ஏற்படும் தோல் மாற்றங்கள், சருமத்தில் எண்ணெய்ப் பசை குறைதல் ஆகியவற்றுடன் பிற உடல்நலப் பிரச்சினைகளும் இதற்குக் காரணம்.
குளிர்காலத்தில் நிலவும் வறண்ட காற்று, குறைந்த ஈரப்பதம் சருமத்தை மேலும் வறட்சியடையச் செய்கின்றன. அரிப்பு கொஞ்சம் கொடுமையானதுதான். சீப்பைவைத்து சிலர் உடலில் சொரியும்அளவுக்குக் கொடுமையானது. இதில் தற்காலிக அரிப்பு, நாள்பட்ட அரிப்பு என இரண்டு வகைகள் உண்டு.